லலித் வீரதுங்க மீது தவறில்லை: பந்துல விளக்கம்!

ஜனாதிபதி செயலாளராக, மஹிந்த ராஜபக்சவின் உத்தரவையே லலித் வீரதுங்க நிறைவேற்றியதாகவும் அவர் மீது தவறில்லையெனவும் தெரிவித்துள்ளார் பந்துல குணவர்தன.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்சவின் பிரச்சாரப் பணிகளுக்குப் பலம் சேர்க்கும் வகையில் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபா நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதன் பின்னணியில் லலித் மற்றும் அனுஷவுக்கு கடூழிய சிறைத்தண்டனையும் இழப்பீடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தம்மாலேயே தமது சகாக்கள் சிறைத் தண்டனை அனுபவிப்பதாக மஹிந்த தெரிவித்து வருவதோடு மஹிந்தவின் உத்தரவை நிறைவேற்றிய லலித் மீது குற்றமில்லையென பந்துல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.