மியன்மாருக்கு ஆதரவாகக் களமிறங்கும் ‘சீனா’!

சுமார் 370,000 ரோஹிங்யர்கள் வெளியேறியும் மூவாயிரத்துக்கு அதிகமானோர் கொல்லப்பட்டும் உள்ள நிலையில் இன்றைய தினம் ஐ.நா பாதுகாப்பு சபை இது குறித்து விவாதிக்க அவசரமாகக் கூடவுள்ளது.

இந்நிலையில், மியன்மார் அரசு நாட்டின் ஸ்தீரத்தன்மையையும் சமாதானத்தையும் பாதுகாக்க முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைக்குத் தாம் ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது சீனா.

ஓகஸ்ட் 25ம் திகதி ரோஹிங்ய புரட்சிக் குழுவொன்று தாக்குதல் நடாத்தியதாகக் கூறி ஆரம்பிக்கப்பட்ட இராணுவ வன்முறைகளால் பெண்கள், சிறுவர்கள் மற்றும் அப்பாவி பொது மக்கள் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டுள்ள நிலையில் தாம் 400 போராளிகளைக் கொன்றுள்ளதாக மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும், எல்லைப் பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான மக்களின் சாட்சியம் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் வந்து சேர்ந்திருக்கின்ற நிலையில் ரக்கைன் மாநிலத்தில் ரோஹிங்யர்களுக்கு எதிராக கண்மூடித்தனமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு இன அழிப்பு இடம்பெற்று வருவுதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உட்பட பல்வேறு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.