அரசியலமைப்பு சபையில் ‘கருப்பாடுகள்’; தவிக்கும் மைத்ரி!

அரசியலமைப்பு சபையில் சிறுபான்மை மக்களுக்கு நியாயபூர்வமாக சேர வேண்டிய பதவிகள் மற்றும் இதர விடயங்களை கடுமையாக எதிர்க்கும் கருப்பாடுகளால் ஜனாதிபதி பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதாக அறியமுடிகிறது.

சிரேஷ்ட நீதிபதி எம்.டி நவாசின் பதவியுயர்வு தொடர்பில் நிலவும் இழுபறியின் பின்னணயில் சோனகர்.கொம் மேற்கொண்ட விசாரணையில் இது குறித்து அறிந்து கொள்ள முடிந்த அதேவேளை இவ்வாறு பல்வேறு நியமனங்கள் தடைப்படுவதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

சிறுபான்மை மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிக்கொண்ட மைத்ரிபால சிறிசேன அனைவருக்கும் பொதுவான தளத்தில் இயங்க மறுப்பது வேதனைக்குரியது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த பையில் கரு ஜயசூரிய, சிப்லி அசீஸ், A.T. ஆரியரத்ன, விஜேதாச ராஜபக்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.