ஆங் சூ கீ பொறுப்பேற்க வேண்டும் : ஐ.நா பிரதிநிதி குற்றச்சாட்டு!

மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் அநீதிகளை அரசாங்கம் உடன் நிறுத்துவதற்கு ஏதுவாக நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்யும் ஆங் சூ கீ மௌனம் கலைக்க வேண்டும் எனவும் தற்போதைய நிலைக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் மியன்மாருக்கான ஐ.நா விசேட அறிக்கையாளர் வலியுறுத்தியுள்ளார்.

பங்களதேஷ் எல்லையில் அமைந்துள்ள முகாம்களில் இன்றைய அளவில் 87,000 பேர் தஞ்சமடைந்துள்ள அதேவேளை தினமும் மக்கள் வெளியேற்றம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுபான்மை முஸ்லிம்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஆங் சூ கீ புறக்கணித்து வருவதாக ஐ.நா அறிக்கையாளர் குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.