முன்னாள் அமைச்சர் அஸ்வர் காலமானார்

கடும் நோய்வாய்ப்பட்டு நவலோக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் அஸ்வர் மாலை 7.30 அளவில் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக. முன்னதாக மதியமே அவர் இறந்து விட்டதாக வெளியான தகவல் குடும்பத்தினரால் மறுக்கப்பட்டிருந்த அதேவேளை நாளைய தினம் தெஹிவளையில் ஜனாஸா நல்லடக்கம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.