நீர்கொழும்பு: STF மீது துப்பாக்கிச் சூடு; இருவர் கைது!

நீர்கொழும்பு, குரன பகுதியில் கொள்ளையர்கள் குழுவொன்று பயணித்த வாகனத்தை விரட்டிச் சென்ற விசேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பதிலுக்கு விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமுற்று கைதான நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் பற்றிய தகவல் கிடைத்ததன் பின்னணியில் விசேட அதிரடிப்படையினர் விரட்டிச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.