தூய்மையான அரசியல் கலாச்சாரம் மலரும்: மைத்ரி நம்பிக்கை

எந்த வகையான தடைகள் வந்தாலும் அதைத் தாண்டி நல்லாட்சியின் அடிப்படையில் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட தூய்மையான அரசியல் கலாச்சாரம் மலரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

மஹாவலி வலயத்தில் விவசாயிகளுக்கான காணி வழங்கலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை அமைச்சர்களின் நடவடிக்கைகள் மற்றும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தி நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.