ட்ரம்ப் பொறுப்புடன் ‘பேச’ வேண்டும்: சீனா அறிவுரை!

வடகொரியா – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் அணு ஆயுத யுத்தமொன்றை உருவாக்கும் வகையில் அறிக்கைப் போர் நடாத்தி வரும் நிலையில் இரு நாடுகளும் அதைத் தவிர்த்துக் கொள்வதோடு டொனால்ட் ட்ரம்ப் பொறுப்புடன் பேச வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது சீனா.

உலகம் இதுவரை கண்டிராத பேரழிவைக் காணப்போகிறது என தெரிவித்துள்ள ட்ரம்ப், தான் பதவிக்கு வந்ததும் முதல் வேலையாக அணு ஆயுதங்களை நவீனப்படுத்த உத்தரவிட்டிருந்ததாகவும் வடகொரியா மீது குண்டு மழை பொழியத் தம் இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை வடகொரியாவின் பேச்சுக்கள் அணு ஆயுத தாக்குதலை வலியுறுத்துவதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் ஓகஸ்ட் நடுப்பகுதியில் குவாம் தீவைத் தாக்கப் போவதாக வடகொரியா தெரிவித்து வருகின்றது.

இந்நிலையிலேயே சீனா இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.