விஜேதாசவுக்கெதிராக வாக்களிக்க மாட்டேன்: மஹிந்த

விஜேதாச ராஜபக்ச விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று வந்தால் தான் வாக்களிக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

விஜேதாச மீது கட்சி நடவடிக்கை எடுக்கத் தவறினால் நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன் வைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே இது பற்றி கருத்துரைத்துள்ள மஹிந்த, தான் ஒரு போதும் அதை ஆதரிக்கப்போவதில்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.