நான் நாட்டுப்பற்றுள்ளவன்; குற்றச்சாட்டுகளை மறுக்கும் விஜேதாச

கடந்த வாரம் 20ம் திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாக முடிவெடுத்து விட்டு இந்தவாரம் சுதந்திரக் கட்சியினர் அதை எதிர்க்கப் போவதாக தெரிவிக்கும் நிலையில் அமைச்சரவையில் ஒற்றுமை பற்றி பேசுவது வேடிக்கையானது என பிரதியமைச்சர் ஹர்ஷவுக்கு பதிலளித்துள்ளார் விஜேதாச ராஜபக்ச.

தனக்கெதிரான குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ள விஜேதாச, தான் ஒரு நாட்டுப்பற்றுள்ளவன் எனும் அடிப்படையில் தனியார் மயப்படுத்தப்பட்டுள்ள பொதுச் சொத்துக்களை ‘சூழ்நிலை’ வரும் போது மீட்டெடுக்க வேண்டுமென்றே கருத்து வெளியிட்டதாகவும் அது தவறாக சித்தரிக்கப்படுவதாகவும் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.