விஜேதாச தொடர்பில் கட்சி நடவடிக்கை அவசியம்: சுஜீவ

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அரசுக்கும் எதிராக கருத்து வெளியிட்டு வரும் விஜேதாச ராஜபக்ச தொடர்ப்பில் கட்சி நடவடிக்கையொன்றை எடுத்தே ஆக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் சுஜீவ சேனசிங்க.

விஜேதாசவின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பில் கட்சி மட்டத்தில் பாரிய அதிருப்தி நிலவி வரும் நிலையில் கட்சி உயர்மட்டம் இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் பிரதியமைச்சர் ஹர்ஷவும் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.