வெல்லம்பிட்டி சம்பவம்: டான் பிரசாத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

வெல்லம்பிட்டிய கொலன்னாவ பகுதியில் நேற்று முன் தினம் இரவு இனவாதி டான் பிரசாத்தினால் உருவாக்கப்பட்ட சர்ச்சை தொடர்பில் இன்று விசாரித்த நீதிமன்றம் அவரை எச்சரித்துள்ளது.

அன்றைய தினம் பிறிதொரு நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் நடவடிக்கை நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையை ஒரு இனவாத நடவடிக்கையாக சித்தரித்து குறித்த நபர் உருவாக்கிய சர்ச்சையின் பின்னணியில் வெல்லம்பிட்டி பொலிசில் முறையிடப்பட்டிருந்தது.

அத்துடன் ஏலவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த டான் பிரசாத் தனது பிணை விதிகளையும் மீறியதாக அங்கு சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது குறித்த நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் செயற்திட்டம் சட்டவிதிகளுக்குட்பட்டதே எனவும் அதற்கான அனுமதியுள்ளது எனவும் ஏற்றுக்கொண்ட நீதிபதி டான் பிரசாத்தை எச்சரித்து வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவத்தை சிங்கள மக்களுக்கு எதிராக முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் சதித்திட்டம் என டான் பிரசாத் அன்றிரவு முகநூல் ஊடாக பிரச்சாரம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-NN