சத்தியம் வெல்லும்; அல்-குர்ஆனை மேற்கோள் காட்டிய ரவி!

சத்தியத்தை என்னதான் மூடி மறைத்தாலும் ஈற்றில் அதுவே வெல்லும் என அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ள ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் தனது பதவி விலகல் தொடர்பில் விளக்கம் ஒன்றை முன் வைத்து விசேட உரையாற்றிய அவர், அல்-குர்ஆனில் தெரிவித்திருப்பது போன்று சத்தியம் ஒரு போதும் தோற்காது என சூளுரைத்து தனது அமைச்சுப் பதவியைத் துறந்து பின் வரிசையில் அமர்ந்து கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

لِيُحِقَّ الْحَـقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ‌ۚ‏

மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை – நிலைநாட்டவே (நாடுகிறான்). – சூரா அன்ஃபால் – 8

சிறந்த நிதியமைச்சர் விருது பெற கடந்த மார்ச் மாதம் லண்டன் சென்றிருந்த முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அங்கு சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் இர்பான் இக்பாலின் கேள்விகளுக்கு வழங்கிய பதில்கள்: