வசீம் கொலை: தொலைபேசி அழைப்பை ‘ஆராய்கிறோம்’: CID

வசீம் தாஜுதீன் கொலை விவகார விசாரணைகள் தொடர்வதாகவும் இறுதியாக வசீம் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளது குற்றப்புலனாய்வுப் பிரிவு.

இறுதியாக வசீம் கடத்தப்பட்ட வாகனத்தைப் பின்தொடர்ந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரிக்குள் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என 2015ல் கூட்டாட்சி அரசாங்கம் நம்பிக்கையை உருவாக்கி வந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.