நேரடி பேச்சுவார்த்தைக்குத் தயார்: தெ.கொரியா!

வட கொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்குத் தாம் தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளது தென் கொரியா.

பிராந்தியத்தில் அமெரிக்க தலையீட்டின் பின்னணியில் வேகமாக ஆயுத அபிவிருத்தியில் ஈடுபட்டு வரும் வடகொரியா, அமெரிக்காவைத் தாக்க வல்ல அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக பகிரங்கமாகவே அறிவித்து செயற்படுகிறது.

இந்நிலையில், அண்மையில் அமெரிக்காவின் அலஸ்கா வரை சென்று தாக்கக்கூடிய வகையிலான கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக பரீட்சித்திருந்தது. இதனைத் தொடர்ந்து விடுக்கப்பட் வரும் எச்சரிக்கைகளையும் வடகொரியா செவி மடுக்கத் தயாரில்லாத நிலையிலேயே தற்போது நேரடியாக இராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குத் தயார் என தென்கொரியா அறிவித்துள்ளது.

எனினும், வடகொரியா இதுவரை பதிலளிக்கவில்லையென்பது மேலதிக பரிசோதனைகள் இடம்பெறும் எனும் பதட்டமும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.