தசநாயக்க கைது; பூஜிதவை விவாதிக்க அழைக்கும் கம்மன்பில

கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் தசநாயக்கவின் கைது அநீதியானது என தெரிவித்துள்ள உதய கம்மன்பில, பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில் தன்னோடு பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

11 இளைஞர்கள் காணாமல் போன விவகாரத்தில் தசநாயக்க கைது செய்யப்பட்டது போல் கடற்படையின் பெயரில் கப்பம் எடுத்தவர்களையும் பொலிசார் கைது செய்ய வேண்டும் எனவும் தசநாயக்கவைத் தனிமைப்படுத்தியது அநீதியானது எனவும் கம்மன்பில தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.