புதிய கெடுபிடி; தொடர்ந்தும் அல்-அக்சாவுக்கு வெளியில் தொழும் பலஸ்தீனர்கள்!

இரண்டு நாட்கள் அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடியிருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நேற்றைய தினம் மீண்டும் திறந்துள்ள போதிலும் அங்கு புதிதாக சிசிடிவி மற்றும் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்தும் பள்ளிவாசலுக்கு வெளியிலேயே பலஸ்தீனர்கள் தொழுது வருவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வணக்கஸ்தளம் ஒன்று இவ்வாறான கெடுபிடிகளுக்குள்ளாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள பள்ளிவாசல் நிர்வாகம் இஸ்ரேல் இவற்றை நிறுத்திக் கொள்ளும் வரை வீதியிலேயே தொழுகைகளில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளதுடன் லயன்ஸ் கேட் பகுதியிலேயே தொழுகையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேலிய பொலிசாருடன் முறுகலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் பதட்ட நிலை தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.