2025 வரையிலும் கூட ‘கூட்டணி அரசு’ தான்: ராஜித சூளுரை!

ஐக்கிய தேசியக் கட்சி – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இவ்வருடம் டிசம்பருடன் முடிவுக்கு வரும் நிலையில் அரசை விட்டு விலகப் போவதாக சு.க அமைச்சர்கள் 18 பேர் தெரிவித்துள்ளமையின் பின்னணியில் தோன்றியுள்ள நிலவரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ராஜித, கூட்டணி அரசு 2020 தாண்டி, 2025 வரை சுமுகமாகப் பயணிக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரு தரப்பும் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதுடன் விலகுவோருக்குப் பதிலாக தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் சு.க உறுப்பினர்களைப் புதிதாக சேர்த்துக்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளதுடன் அப்படியே கூட்டணி முறிந்தாலும் ஐ.தே.க தனித்து ஆட்சியமைக்கும் என அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.