உள்ளவர்கள் போனால் புதிய கூட்டணி; மைத்ரி – ரணில் வியூகம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் டிசம்பருடன் முடிவுறவுள்ள நிலையில் தாம் வெளியேறப் போவதாக தற்போதைய அரசில் பங்கெடுத்து வரும் 18 சு.க அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவ்வாறு இடம்பெறின் ஜனவரியில் புதிய கூட்டணி அரசொன்று அமையும் எனவும் அதன் போது தற்போது எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டு ஐ.தே.க – சு.க தொடரும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய கூட்டணி முறிந்தால் தனித்து ஆட்சியமைக்கவும் ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.