அல்ஹம்துலில்லாஹ்; அல்-அக்ஸா மீளத் திறக்கப்பட்டது!

கடந்த இரு தினங்களாக இஸ்ரேலிய படையினரால் மூடி வைக்கப்பட்டிருந்த அல்-அக்ஸா பள்ளிவாசல் இன்று மீளத் திறக்கப்பட்டுள்ளது.

வெள்ளியன்று அல்-அக்ஸா வளாகத்தினுள் இஸ்ரேலிய பொலிசாரினால் பலஸ்தீன இளைஞர்கள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்த அதேவேளை குறித்த இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் இரு இஸ்ரேலிய பொலிசார் உயிரிழந்திருந்தனர்.

சம்பவத்தினைத் தொடர்ந்து ஜும்மா தொழுகை நடாத்தவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் அருகில் உள்ள வீதிகளில் தொழுகைகள் நடாத்தப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே இன்று பள்ளிவாசலை இஸ்ரேலிய நிர்வாகம் மீண்டும் திறந்துள்ளமையும் பலஸ்தீன தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.