தனது பெயர் சூட்டப்பட்ட ‘சிரிய’ குழந்தையைப் பார்வையிட்ட ஜஸ்டின்!

சிரிய அகதிகளை அமெரிக்காவும், ஐரோப்பாவும் நிராகரித்துக்கொண்டிருந்த சூழ்நிலையில் அவர்கள் தாராளமாக கனடா வரலாம் என அழைப்பு விடுத்து புகலிடம் வழங்கியிருந்த ஜஸ்டின் ட்ரூடோவின் நிர்வாகம் வெகுவான வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், அவருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக தனது குழந்தைக்கு அவரது பெயரையும் சேர்த்தே சூட்டி அழகு பார்த்த சிரிய தம்பதியின் குழந்தையை நேரில் பார்வையிட்டுள்ளார் கனேடிய பிரதமர்.

ஜஸ்டின் ட்ரூடோ ஆதம் பிலான் என குழந்தைக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

2015 நவம்பர் முதல் 2017 ஜனவரி வரையான காலப்பகுதியில் 40,000 சிரிய அகதிகளுக்கு ஜஸ்டினின் நிர்வாகம் கனடாவில் புகலிடம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.