சதிகாரர்களின் ‘தலைகளை’ துண்டிப்போம்: அர்துகான் சூளுரை!

தோல்வியில் முடிந்த துருக்கி இராணுவ புரட்சியின் 1 வருட நிறைவு நிகழ்வு நேற்று இஸ்தான்புல்லில் இடம்பெற்றிருந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய துருக்கி அதிபர் அர்துகான், சதிகாரர்களின் தலைகளைத் துண்டிப்போம் என சூளுரைத்துள்ளார். துருக்கியில் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வரும் வகையிலான எந்த ஒரு பிரேரணை பாராளுமன்றுக்குக் கொண்டு வரப்பட்டாலும் அதைத் தான் அனுமதிக்கப் போவதாக தெரிவித்திருந்த அவர் மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளார்.

மரண தண்டனைச் சட்டம் அமுலுக்கு வந்தால், ஐரோப்பிய யூனியனில் இணைந்து கொள்ளும் அர்துகானின் நீண்டகால எதிர்பார்ப்பும் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.