ஐ.எஸ். அமைப்புக்கு விரைவில் புதிய தலைவர்?

2015ம் ஆண்டு தொடக்கம் பல தடவைகள் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் பக்தாதி இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வந்திருந்த நிலையில் அவ்வமைப்புக்கு புதிய தலைவர் ஒருவரின் அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுவதாக பரவலாக தகவல் வெளியிடப்பட்டு வருகிறது.

பக்தாதி கலீபாவாகத் தன்னைப் பிரகடனம் செய்திரந்த மொசூல் ஈராக் படை வசம் வீழ்ந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற யுத்தத்தில் அவர் இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே படத்தில் காணப்படும் ஜலாலுதீன் அல் துனிசி அடுத்த தலைவராக அறிவிக்கப்படலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.