அவசரப்பட்டு விலக வேண்டாம்: சந்திரிக்காவும் வேண்டுகோள்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அவசரப்பட்டு அரசிலிருந்து விலகக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சரவையில் பங்கேற்கும் 18 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் செப்டம்பருடன் விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி, துமிந்த மற்றும் சந்திரிக்காவும் தற்போது இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளமையும் கூட்டணி முறிந்தால் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் என கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.