முஸ்லிம் சமூகமும் புதிய – பழைய அரசியல் கட்சிகளும்

தேர்தல் திணைக்களத்தினால் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுவர்களைத் தலைவர்களாகவும் செயலாளர்களாகவும் கொண்டு பதிவாகியுள்ள கட்சிகள் சிலவற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேசிய மற்றும் பிராந்திய அளவில் முஸ்லிம் மக்களின் ஆதரவு பெற்ற கட்சிகளாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காகத் தேர்தல் திணைக்களத்திற்கு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஆறு கட்சிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த ஆறு கட்சிகளும் அரசியல் கட்சிகளாக அண்மையில் தேர்தல் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு பதிவு செய்யப்படடுள்ளதாக அறிவிக்கப்பட்ட கட்சிகளில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆசாத் சாலியை செயலாளராகக் கொண்ட தேசிய ஐக்கிய முன்னணியும் பொறியியலாளர் அப்துல் றஹ்மானை தவிசாளராகக் கொண்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் புதிய அரசியல் கட்சிகளாகப் பதிவாகியுள்ளன.

இதனடிப்படையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்று முஸ்லிம் சமூகம் சார் கட்சிகளோடு புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய இரு கட்சிகளையும்; சேர்த்து ஐந்து அரசியல் கட்சிகளை முஸ்லிம் அரசியல் கொண்டிருக்கிறது.

எண் கணிதத்தில் மூன்றும் இரண்டும் ஒன்றாக முடியாது. அவ்வாறு கணித்தால், கணிக்க முயற்சித்தால் அக்கணிப்பும் முயற்சியும் பிழையாகும். ஆனால், முஸ்லிம் அரசியலில், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகள் அடையப்படுவதற்கும், உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும், சமூக இருப்பின் ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்படுவதற்கும், எதிர்கால சமூகம் நிம்மதியாக இந்நாட்டில் வாழ்வதற்கும் செயற்பாட்டிலுள்ள மூன்று முஸ்லிம் அரசியல் கட்சிகளும் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பாக ஒன்றாகப் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. மக்கள் மத்தியிலும் மூன்றும் இரண்டும் ஒன்றாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியிருக்கின்றன.

ஏனெனில், முஸ்லிம் அரசியலின் சிதைவும், பலவீனமும் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் பௌத்த பேரினவாதம் மூக்கை நுழைக்கவும் சந்திக்கிழுக்கவும் முயற்சித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. முஸ்லிம் சமூதாயத்தின் பலமும் பலவீனமும் சமகால முஸ்லிம் அரசியலின் பலத்திலும், பலவீனத்திலுமே தங்கியிருக்கின்றன என்பதை கடந்த கால அரசியல் வரலாறு நமக்கு புடம்போட்டுக் காட்டுகின்றன.

முஸ்லிம் அரசியலின் பலமும் பலவீனமும்

இலங்கையின்; அரசியல் வரலாற்றை சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம், பிற்பட்ட காலம் என வகுத்துக்கொண்டால், இவ்விரு வரலாற்றுக் காலங்களிலும் முஸ்லிம்கள் நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்திருக்கிறார்கள். பல்லின சமூகக் கட்டமைப்பைக் கொண்ட இந்நாட்டில் ஒரு இனம் பிறிதொரு இனத்தின் சில குழுக்களினால் ஏதோ ஒரு வகையில் காலத்திற்குக் காலம் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கிறது. வன்முறைகள் ஏவிவிடப்பட்டிருக்கின்றன. உயிர், உடமைகள், வாழ்விடங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.. உரிமைகளை இழந்திருக்கின்றன என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் காணப்படுகின்றன..

1814, 1915, 1983, 1990, 2014ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இனமோதல்கள் மற்றும் அட்டூழியங்களை இவற்றிற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இக்காலங்களில் முஸ்லிம் சமூகத்திலிருந்த ஒரு சிலர் ஆட்சியாளர்களின் செல்லப் பிள்ளைகளாகச் செயற்பட்டு இனத்துவத்தை அடமானம் வைத்துமிருக்கின்றார்கள். அவர்களின் பலவீனமான அரசியல் செயற்பாடுகள் ஒரு தனித்துவ சமூகத்தின் வாக்குப்பலத்தைப் பலவீனமடையச் செய்திருக்கிறது. உரிமைகளைக் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.

சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் உருவான சில சூழ்நிலைத்தாங்கங்ளின் விளைவுகளால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலிருந்து அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உதயமாகியிருக்கின்றன. இவ்வகையில், 1944ஆம் ஆண்டு அகில இலங்கை மலாய அரசியல் யூனியன்; உருவாக்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு அகில இலங்கை இஸ்லாமிய முற்போக்கு முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி 1964ல் தோற்றம் பெற்றது. அவ்வாறு அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய முஸ்லிம் மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் உருவாகின.

ஆனால், இக்கட்சிகளினால் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக கூட்டாக இணைந்து செயற்படவும் முடியவில்லை. இதனால் முஸ்லிம் அரசியல் பலவீனடைந்தது. அத்துடன் கால ஓட்டத்தில் இக்கட்சிகள் மக்கள் செல்வாக்கை இழந்தன. 1948ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு காலம் வரை இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் பலமிக்கதொரு அரசியல் கட்சி உருவாக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் ஆரோக்கியமாக இதயசுத்தியோடு முன்னெடுக்கப்படவில்லை என்பதை இக்கட்சிகளின் செல்வாக்கிழப்பையும்; அதனால் ஏற்பட்ட பலவீனத்தையும் முஸ்லிம் அரசியல் வரலாற்றில் நோக்க முடிகிறது.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுக் காயங்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டுமாயின் தன்மானத்தை இழக்காத, உறுதியான கொள்கைப் பிடிப்போடு கூடிய, தனித்துவமிக்க, பலமான அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்படுவது அவசியம் என்ற சிந்தனை பெரும் தலைவர்; மறைந்த அஷ்ரப்பிடம் உதித்தது. இந்த உணர்வின் வழியில்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி 1982 ஆம் ஆண்டு கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டு, 1986இல் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.

அதுவரை, முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும்; மாற்றுச் சமூகத்திலும் தங்களை சமூகத்தின் அரசியல் தலைவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு அரசியல் செய்தவர்கள் அஷ்ரப் எனும் ஆளுமையினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் வரவையடுத்து அவர்களது செல்வாக்கு குறிப்பாக கிழக்கு அரசியில்வாதிகளின் செல்வாக்குச் சரியத் தொடங்கியது.

ஐக்கிய தேசியக் கட்சியிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் இன்னும் ஓரிரு தேசியக் கட்சிகளினதும் உறுப்பினர்களாக அங்கத்தும் பெற்று, மக்கள் அரசியல் மயப்படுவதை தடுத்துக்கொண்டு, தங்களின்பால் மக்களை இணைத்துக்கொண்டவர்களாக ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு, சமூகம் தோல்வியுற்று, தாங்கள் மட்டும் வெற்றிபெற்ற வரலாற்றைக் காண முடிகிறது.

குறிப்பாக, வடக்கு கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரவு இவர்களின் இவ்வாறான சித்த விளையாட்டுக்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலினூடாக 4 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட அஷ்ரப் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்லின்போது 7 ஆசனங்களைப் பெற்று இந்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தியை அன்றைய பிரதமராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவிற்கு வழங்கினார். ஆட்சி மாற்றத்திற்கு அவர் வழி நின்றார்.

முஸ்லிம்கள் அரசியல் மயப்படுத்தப்படாத, நொந்துகெட்ட சமூகமாக இருந்து, ஒவ்வொரு தேர்தல்களிலும் வாக்களித்து அவ்வாக்குகளினால் வெற்றிபெறுபவர்கள் தங்களது தனிநபர் நலன்களை அடைந்துகொள்வதற்கான பகடைக்காய்களாக மக்களைப் பயன்படுத்தினர். குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகள் இந்நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி பெற்றிருந்தும் அந்த வாக்குச் சக்தியை ஒன்றுதிரண்டக் கூடிய ஒரு தலைமைத்துவம் அஷ்ரப் எனும் ஆளுமை முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கும் வரை உதயமாகவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அஷ்ரப்பின் ஆரோக்கியமிக்க அரசியல் பயணம் தென்னிலங்கையில் பாரிய அதிர்வை ஏற்படுத்தியது. ஆளுமையும் அரசியல் எதிர்கால வியூக சிந்தனையும் நிறைந்த அத்தலைவரின் அரசியல் பயணத்தின் வெற்றி ஒளி இலங்கை முழுதும் பிரகாசிக்கத் தொடங்கியதன் விளைவு அவரை நோக்கிய கருத்துவாதங்களை அதிகரிக்கச் செய்தது.

சமூக நலன்கொண்டும் நாட்டின் நலன் கருதியும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கூக்குரல்களை பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் சில்லறை முஸ்லிம் அரசியல் நபர்களைக்கொண்டே முன்னெடுக்கச் செய்யப்பட்டன. அதன் முடிவு 2000ஆம் ஆண்டில் ஹெலிக்கெப்டர்; விபத்தினூடாக முஸ்லிம் சமூகத்திற்கான அவரது குரல் மௌனமாக்கப்பட்டது.

அவரின் மரணம் தலைமைத்துவ பதவி ஆசையை முஸ்லிம் காங்கிரஸுக்குள் உருவாக்கியது. . தேசிய ஐக்கிய முன்னணி என்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்றும் ஒன்றிணைந்தவர்கள் சுயநலத்திற்காகவும் பதவிக்காகவும் விட்டுக்கொடுப்பையும் மக்கள் நலனையும் மறந்து பிரிந்தனர். அபிமானிகளும், ஆதரவாளர்களும் அவரவர் நேசித்தவர்கள் பக்கம் நேசக்கரங்களை நீட்டினர். அதன் பின்னர் இவ்விரு கட்சிகளிலிருந்தும் பிளவுகள் தொடர்ந்தன. பிளவுகளின் பின்னணியில் நியாயங்களும் இருந்தன.

பிளவுகளின் நியாயங்கள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் பிளவுபட்டு உருவான கட்சிகள் தங்களது பிராந்திய அரசியலுக்கு முன்னுரிமை வழங்கியும் செயற்பட ஆரம்பித்தன. இதனால் முஸ்லிம் அரசியல் தேசிய ரீதியில் பலவீனமடைந்தது. முஸ்லிம் அரசியலின் பலவீனம் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பலமாக அமைந்தது. தற்போது முஸ்லிம்களின் மூக்கின் நுனிவரை இனவாதம் வந்து நிற்கிறது.

முஸ்லிம்களை மாத்திரமின்றி இந்நாட்டில் வாழும் சிறுபான்;மை சமூகமான தமிழ் மக்கள் மீதும் கடந்த காலங்களில் இனவாதம் அவற்றின் இருப்புக் கரங்களை நீடடியது. அதனால் உருவான இனப்பிரச்சினைக்கும்; அதன் அழிவுகளுக்கும் தீர்வும் நிவாரணமும் கிடைக்கப் பெறாத நிலையில் சிறுபான்மை சமூகங்களின் ஆதரவுடன் 2015ஆம் உருவாக்கப்பட்ட நல்லாட்சி என்ற கூட்டாட்ச்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளின் மீதான நம்பிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காணும் நோக்கோடு அவற்றை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு மாற்றம் அல்லது அரசியலமைப்பு உருவாக்கம் அதற்கான முயற்சிகள் இன்று கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு நான்கு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். மகாநாயக்கத் தேரர்களை மீறி அரிசியலமைப்பு மாற்றமோ அல்லது புதிய அரசியலமைப்போ உருவாகாது. அது வராது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், பதிய அரசியலமைப்பில் சகலரது உரிமைகளும் பாதுகாக்கப்படும் என அரசாங்கம் கூறுகின்றது. அவ்வாறாயின் புதிய அரசியலமைப்பிலிருந்து சரியாச்சட்டம், ஹலால் சான்றிதழ், காதி நீதிமன்றம் ஆகியவற்றை நீக்க வேண்டும. மகாநாயக்;க தேரர்கள் அவற்றை வலியுறுத்த வேண்டுமென பேரினவாத அமைப்புக்கள் கூக்குரலிட்டுள்ளன.

இவர்களின் இந்நிலைப்பாடானது முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் மிகவும் ஆபத்தானது. ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கும் நிலைக்கு பேரினவாதம் வந்துள்ளது. இந்நிலையில் அனைத்துத் துறைசார்ந்தவர்களும் ஒன்றிணைந்து முஸ்லிம் அரசியலைப் பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஒன்றிணைப்பதன் மூலம் அல்லது அரசியல் கட்சிகள் ஒன்றிணைவதன் மூலம் பலம் பொறுத்திய அரசியல் சக்தியினூடாக எமக்கெதிரான பேரினவாத்தின் முன்னெடுப்புக்களை இராஜதந்தில ரீதியில் முறியடிக்க முடியும்.

முஸ்லிம் கூட்டமைப்பின் தேவை

கடந்த கால மற்றும் நிகழ்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற சதித்திட்டங்களின் விளைவாகவும் அவற்றுக்கெதிரான நடவடிக்கைகளை இராஜதந்திரி ரீதியாகவும,; சாத்வீகமாகவும் முன்னெடுப்பதற்காகவும்; முஸ்லிம் சமூகத்திலுள்ள பல்வேறு தரப்புக்களையும் ஒன்றிணைத்த முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது அவசியம் என்ற வேண்டுகோள்களும், அறிக்கைககளும் கடந்த காலங்களில் வெளிவந்தன. அதற்கான அழைப்புக்களும்; பல்வேறு தரப்புக்களிலிருந்து விடுக்கப்பட்டன. இருப்பினும் இக்கூட்டமைப்பு உருவாக்கத்திற்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வி கடந்த காலங்களில் எழுப்பப்பட்டது.

இந்நிலையில்தான், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தலைவிதியை தீர்மாணிக்க வேண்டியது காலத்தின் அவசரத் தேiவை எனக் கருதி, தலைவர் அஷ்ரபோடு இருந்த மூத்த போராளிகள், முன்னோடிகள், முஸ்லிம் சமூகம் தொடர்பான கொள்கையில் இன்று வரை உறுதியாகவுள்ள போராளிகள், சமகால பத்திஜீவிகள், அரசியல் செயற்பாடடாளர்கள், சமூக அமைப்புக்கள், சமூக் அக்கறையுடையோர், உலமாக்கள், இளைஞர்கள் அனைவரும் சமூகத்தின் நன்மைக்காக கட்சி மற்றும் கருத்து வேறுபாடுகள் எல்லாம் மறந்து ஒன்று சேர்ந்து கூடிப் பேச வருமாறு தேசிய காங்கிஸின் தலைவரும் முன்னால் அமைச்சருமான அதாவுல்லாவினால் அழைப்பு விடுத்திருந்தார்.

கிழக்கு மக்கள் அவையம் என்ற பெயரில் அவரால் விடுக்கப்பட்ட இவ்வழைப்பை ஏற்று கிழக்கின் பல அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து பல தடவை கலந்தாலோசனை நடத்தியுள்ளனர். இந்நியையில்தான் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கத்திற்கான நகர்வானது கடந்த வாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னால் செயலாளர் ஹசன் அலி மற்றும் முன்னால் தவிசாளர் பசீர் சேகு தாவூத் ஆகியோரினால் வலுப்பெற்றிருக்கிறது.

இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரிஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்பவற்றின் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கொள்கையளவில் அத்தலைமைகளினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மேலும் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரசுக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும் இரு செயற்பாட்டாளர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கடந்த காலங்களில்; இவ்வாறானதொரு கூட்டமைப்பை உருவாக்க பல்வேறு முயற்சிகள் ஊடகவியலாளர்களாலும் சிவில் அமைப்புக்களினாலும் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும். முஸ்லிம் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் குறைந்தபட்சம் கொள்கையளவில் ஒன்றுபட்டு செயற்படுவதற்கான எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அக்காலங்களில் முன்னெடுக்க வில்லை. ஊடக அறிக்கைகளினூடாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக அறிக்கை விட்டார்களே தவிர அவை செயல் வடிவம் பெறவில்லை.

இந்நிலையில்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய இரு பதவி வகித்தவர்கள் முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். இம்முயற்சி வெற்றியளிக்க வேண்டுமென்பதோடு, இம்முஸ்லிம் கூட்டமைப்பானது தேர்தலுக்கான கூட்டமைப்பாக மாத்திரமின்றி இந்நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களினதும்; உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்பாகவும் செயற்பட வேண்டும். அத்தோடு, அதிகளவிலான முஸ்லிம்களின் வாக்கு வங்கியைக்; கொண்ட கிழக்கிலும் வடக்கிலும் உள்ள அரசியல் தலைமைகள் ஒன்றுபடுத்;தப்படுவதோடு வடக்கு கிழக்கிற்கு வெளியிலும் உள்ள அரசியல் தலைமைகளும் ஒன்றிணைக்கப்படுவதன் ஊடாக முஸ்லிம்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள, முன்னெடுக்கத்திட்டமிடப்படுள்ள செயற்பாடுகளுக்கு எதிராக அரசியல ரீதியான ராஜதந்திரி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

ஆதலால், முஸ்லிம்களின் தேசிய மற்றும் பிராந்திய ஆதரவைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்றும் தேசிய ஐக்கிய முன்னணியும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் ஆகிய இரண்டும் ஒன்றாக இணைந்து முஸ்லிம் கூட்டமைப்பாக தோற்றப்பெறுவதன்; மூலமே முஸ்லிம்களின் சமகால மற்றும் எதிர்கால அரசியல், சமய, சமூக மற்றும் வாழ்விட இருப்புக்கள் இறைவன் உதவியால் உறுதிப்படுத்தப்படும் என்பது நிதர்சனமாகும்.

-எம்.எம்.ஏ.ஸமட்