எதற்காக எங்களைத் தண்டிக்கப் பார்க்கிறார்கள்? கோத்தா கேள்வி!

நாட்டில் நிலவி வந்த கொடூர யுத்தத்தை நிறைவு செய்த காரணத்திற்காக எங்களைத் தண்டிக்க முயல்வதாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என தெரிவித்துள்ளார் கோத்தபாய ராஜபக்ச.

ராஜபக்சக்கள் நாட்டை அபிவிருத்தி செய்திருக்கிறார்களே தவிர ஒரு போதும் திருடவில்லையெனவும் தெரிவித்துள்ள அவர், முன்னைய நாட்டின் தலைவர்கள் யாரும் முடித்து வைக்காத யுத்தத்தையே தமது குடும்பம் முடித்து வைத்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதாகவும் அதற்காக இப்போது தமது குடும்பத்தைத் தண்டிப்பதற்கும் முயற்சி செய்கிறார்கள் எனவும் இன்று கண்டியில் வைத்து தெரிவித்துள்ளார்.