UKல் தீவிரவாதத்தை வளர்ப்பது சவுதியென ‘அறிக்கை’!

ஐக்கிய இராச்சியத்தில் தீவிரவாதத்தை வளர்ப்பதின் பிரதான அனுசரணையாளராக சவுதி அரேபியா செயற்படுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது பிரபல சிந்தனையாளர்கள் வட்டமான ஹென்றி ஜக்சன் சங்கம்.

மத்திய கிழக்கில் இஹ்வான்கள் மற்றும் ஈரானுடன் இணைந்து கட்டார் தீவிரவாதத்தைப் பரப்பி வருவதாக தெரிவித்து சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகள் ராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ள நிலையில் சவுதி தொடர்பில் இவ்வாறான ஒரு அறிக்கை வெளியாகி ஐக்கிய இராச்சிய பிரதான ஊடகங்களில் இடம்பிடித்துள்ளது.

இதேவேளை, இவை அடிப்படையற்ற குற்றச்சாட்டென அங்கியங்கும் சவுதி அரேபிய தூதரகம் மறுத்துள்ளதாக சோனகர்.கொம் ஐக்கிய இராச்சிய செய்திப்பிரிவு தெரிவித்துள்ளது.

2015ம் ஆண்டிலிருந்து அவ்வப்போது இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுந்து வந்துள்ள நிலையில் சவுதியுடன் நெருங்கிய உறவைப் பேணி வரும் ஐக்கிய இராச்சியம் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக பேசுவதைத் தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவுக்கு போட்டியாக USA-தெ.கொரியா ஏவுகணை பயிற்சி!
ஆளுனர் பதவி ஏமாற்றம்; தூதர் பதவியை கைவிடப் போகும் லியனகே!