இஸ்ரேல் சென்று உற்ற நண்பனை சந்தித்த மோடி!

வருடாந்தம் ஆகக்குறைந்தது 1 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்யும் தமது உற்ற நண்பன் இஸ்ரேலின் பிரதமர் நேதன்யாஹுவை சந்தித்து வரலாற்றுப் பதிவை உருவாக்கியுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

இவரே ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலின் பிரதமரை சந்தித்த முதல் இந்திய பிரதமர் என்பது சுட்டிக்காட்டத்தக்க அதேவேளை இந்தியா – இஸ்ரேலிடையே 4.2 பில்லியன் டொலர் வர்த்தக தொடர்புகளும் வருடாந்தம் 35,000 – 40,000 வரையான சுற்றுலாப் பயணிகளின் பரிமாற்றமும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பலஸ்தீனர்களுடன் எதுவித பொருளாதார உறவுகளுமில்லாத இந்தியா இஸ்ரேலின் உறவை பெரிதும் மதிக்கின்றமையும் இன்றைய சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள மோடி, தனது நண்பனை சந்தித்ததில் பெருமையடைவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.