மத்திய கிழக்கில் ‘நேட்டோ’ போல் இராணுவ கூட்டணி: ட்ரம்ப்

நேட்டோ போன்ற இராணுவ கூட்டணியொன்றை மத்திய கிழக்கில் அமைப்பதற்கு டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதற்தடவையாக வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் ஈடுபடும் ட்ரம்ப், சவுதி அரேபியாவின் தலைமையில் முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். அங்கு மத்திய கிழக்கில் மீண்டும் தம் மீதான நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் சவுதியுடனான உறவைப் பலப்படுத்தி, அதன்மூலம் ஏனைய நாடுகளையும் அரவணைத்து மத்திய கிழக்கில் இராணுவ கூட்டணியொன்றை உருவாக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

எனினும், இக்கூட்டணியில் ஈரான் தவிர்க்கப்படும் என்பதும் ஈரான் மற்றும் சிரியாவை எதிர்த்தரப்பில் கொண்டே இக்கூட்டணி அமைக்கப்படும் அதேவேளை இது இன்னொரு புறத்தில் இஸ்ரேலைப் பாதுகாக்கும் திட்டமாகவும் அமையும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.