இனவாதம்; நாடாளுமன்றில் விவாதிக்கக் கோரும் மு.ரஹ்மான்

தற்போது எழுந்துள்ள இனவாத சர்ச்சை சூழ்நிலை பற்றி எதிர்வரும் 23ம் திகதி நாடாளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் ஒன்றை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.

இன்றைய தினம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இது குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலையீட்டைக் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்ட அதேவேளை தீர்க்கமான நடவடிக்கை இல்லையேல் மேலதிகமாக சுயாதீன நடவடிக்கைக்குத் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் லண்டன் சென்றிருந்த முஜிபுர் ரஹ்மானிடம் நாட்டில் துளிர்விடும் இனவாதம் குறித்து சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் இர்பான் இக்பால் சுட்டிக்காட்டி மேற்கொண்ட பிரத்யேக நேர்காணலுக்காள காணொளியைக் கீழ்க் காணலாம்: