வெள்ளவத்தையில் சரிந்த கட்டிடம் சட்டவிரோதமானது: சம்பிக்க

வெள்ளவத்தையில் நேற்றைய தினம் சரிந்த கட்டிடம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

2009ம் ஆண்டு வீட்டுத் தொகுதியொன்றை அமைப்பதற்கு அனுமதியைப் பெற்றுள்ள போதிலும் குறித்த இடம் அதற்கு உகந்ததா என்பதை உறுதி செய்து கொள்ளும் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளாது நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துள்ளதோடு கட்டுமானத் திட்டமிடல் தவறே கட்டிடம் சரிவதற்கான காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரழிந்ததோடு 13 பேர் வரை காயமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.