முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஞானசார பொலிசில் முறைப்பாடு!

ஞானசாரவுக்கு எதிராக பல்வேறு பொலிஸ் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சற்று முன் பொலிஸ் தலைமையகம் சென்ற பயங்கரவாதி ஞானசார முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோருக்கு எதிராகவே இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் வளங்களைச் சுரண்டுகின்ற இவர்களுக்கு இது அரபு தேசம் இல்லையென்பதை மறந்து எந்த ஆட்சி வந்தாலும் அந்த ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்று வில்பத்தில் நில அபகரிப்பு, போதைப்பொருள் விற்பனையாளர்களைப் பாதுகாத்தல், அடிப்படைவாதிகளைப் பாதுகாத்தல், வெளிநாட்டு நிதியைப் பெற்று தனியார் ஆட்சி நடாத்துவது, சதொச நிறுவனங்களை முஸ்லிம்களிடம் அதிகமாக வழங்கியிருப்பது, ரிசாத் பதியுதீன் 3000 ஏக்கர் சொத்து சேர்த்திருப்பது என நீண்ட பட்டியலிட்டுள்ள ஞானசார, மன்னார், வில்பத்து வனப்பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒளித்து வைத்து இந்தியாவைத் தாக்குவதற்கு ஏற்ப சூழ்நிலையை உருவாக்கி வருவதாகவும் கிழக்கில் தனியாக ஒரு முஸ்லிம் பிராந்தியத்தை உருவாக்கவும் முயல்வதாகவும் ஞானசார மேலும் தெரிவித்துள்ளார்.

இதனால், தினமும் சிங்களவர்கள் பாதிக்கப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த அரசியல்வாதிகள், அவர்களது வர்த்தகங்கள், வங்கிக் கணக்குகளை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதோடு சிங்களவர்களுக்கு ஏதும் என்றால் நீதி செயற்படுவதில்லையெனவும் முஸ்லிம் ஒருவருக்கு மூத்திரம் போகவில்லையென்றாலும் அது பற்றித்தான் ஆட்சியாளர்கள் கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.