‘தீவிரவாதிகள்’ எல்லோருமே முஸ்லிம்கள்; மியன்மார் தூதர் விசமம் (video)!

தனது நண்பர் ஒருவர் தன்னிடம் பேசும் போது முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் இல்லையென தனக்கு விளக்கம் தந்ததாகவும் ஆனாலும் தான் அவருக்கு, முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் இல்லை ஆனால் தீவிரவாதிகள் எல்லோரும் முஸ்லிம்கள் என பதிலளித்ததாகவும் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான பர்மிய தூதர் யுமீன் தீன் சான்.

இன்றைய தினம் பொது பல சேனா பயங்கரவாதிகள் அமைச்சர் மனோ கணேசனின் சந்திப்பையடுத்து நேரடியாக பர்மிய தூதரகம் சென்று இலங்கையில் கரையொதுங்கிய அகதிகள் குறித்து விசாரித்து விட்டு இலங்கையில் இஸ்லாம் ஒரு புற்று நோயாக வளர்ந்து வந்திருப்பதாகவும் பெரும் சங்கடமாகவுள்ளதாகவும் தெரிவித்திருந்த நிலையில் தனது பங்கிற்கு ராஜதந்திர பதவியில் இருக்கும் குறித்த நபர் இவ்வாறு பதிலளித்துள்ளார். (13.50 Video)

எனினும், ராஜதந்திர பதவியில் இருக்கும் அவருக்கு எதிராக இந்நாட்டில் வழக்குத் தொடர முடியாது என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.