அகதிகள் மியான்மாரைச் சேர்ந்தவர்கள் இல்லை; ஞானசாரவிடம் தூதர்!

அண்மையில் இலங்கையின் வட பகுதியில் கரையொதுங்கியவர்கள் தமது நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லையெனவும் அவர்களை இலங்கை வெளியேற்றும் எனவும் ஞானசாரவிடம் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான பர்மிய தூதர்,

குறித்த அகதிகள் குழுவுக்கு என்ன நடவடிக்கையெடுக்கப் போகிறீர்கள் இன்று தூதரகத்துக்குச் சென்று பயங்கரவாதி ஞானசார குழுவினர் வினவியபோதே இவ்வாறு பதிலளித்த தூதர், தமது தரப்பு அவர்களை அணுகி விண்ணப்பப் படிவங்கனை வழங்கியதாகவும் அந்த விண்ணப்பங்களை தமது நாட்டு மொழியில் அவர்களுக்கு நிரப்பக்கூடத் தெரியவில்லையெனவும் அதனால் அவர்கள் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் இல்லையென்பதால் இலங்கை அரசாங்கமே நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.