பொலிஸ் காவலுடன் முஸ்லிம்களை வெறுப்பூட்டும் ஞானசார! (video)

முஸ்லிம்களுக்கு எதிரான தமது போராட்டம் இன்னும் முடியவில்லையென தெரிவித்திருந்த பயங்கரவாதி ஞானசார, இன்றைய தினம் மீண்டும் தனது வெறுப்பூட்டும் பேச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பூரண சுதந்திரத்தைப் பயன்படுத்தி பொலிஸ் காவலுடன் முஸ்லிம்களைப் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு முதல் அவ்வப்போது பேசுபொருளாக்கப்பட்டு வரும் பொலன்நறுவ, ஜலகெலும்கின்ன (சோமாவதி) பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு இன்று பொலிஸ் மற்றும் ஊடக ஒத்துழைப்புடன் பயணித்த ஞானசார, அங்கு அல்லாஹ்வைத் தூற்றும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டு தனக்கு மைத்ரிபால சிறிசேன அரசிலும் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தின் மூலம் மீண்டும் முஸ்லிம்களைப் புண்படுத்தியுள்ளார்.

ஞானசார விவகாரத்தைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியில் அமர்ந்திருக்கும் போது எதிர்த்துப் பேசாதும் தேர்தல் காலத்தில் கட்சி மாற தீர்மானித்தால் மாத்திரம் அதனைக் கொண்டு பிரச்சாரம் செய்பவர்களாகவும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இருக்கும் நிலையில், தற்போதைய ஞானசாரவின் நடவடிக்கைகள் அரசின் அனுசரணையோடே இடம்பெறுவதாக மஹிந்த ராஜபக்ச அணி குற்றஞ்சாட்டி வருகிறது.

இதேவேளை, மஹிந்த அரசிலும் இதே வகையான மௌனப் போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தமையும் ஜலகெலும்கின்ன 2000 ஏக்கர் காட்டுப்பகுதி அரசியல் ஆளுமையில் அழிக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா மற்றும் சிங்ஹலே அமைப்பு தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.