இனவாத அரசியல் : தயா கமகேவுக்கு ரணில் எச்சரிக்கை! (video)

இறக்காமம் புத்தர் சிலை விவகாரத்தின் பின்னணியில் அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தயா கமகேயை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்ததாக தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.

தற்போது லண்டன் சென்றுள்ள முஜிபுர் ரஹ்மான், அங்கு சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் இர்பான் இக்பாலுடன் இடம்பெற்ற பிரத்யேக நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இறக்காமம் விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரான தயா கமகேயின் தொடர்பு பற்றி ஊடகவியலாளர் இர்பான் இக்பால் வினவிய போதே இவ்வாறு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இவ்விவகாரம் தொடர்பில் தாம் கட்சித் தலைவரிடம் எடுத்துரைத்ததன் பின்னணியில் அம்பாறையில் ‘இனவாத’ அரசியலில் ஈடுபட வேண்டாம் என தயா கமகே எச்சரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேர்காணலின் குறித்த பகுதி அடங்கிய காணொளி: