லஞ்சம் கொடுத்தாவது சதாமைக் காப்பாற்ற முனைந்த கடாபி!

முன்னாள் ஈராக்கிய தலைவர் சதாம் ஹுசைனை விடுவிக்க அமெரிக்கர்களுக்கு முன்னாள் லிபிய அதிபர் கடாபி லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் ஈராக்கிய நீதிபதியொருவர்.

2006 டிசம்பர் 30ம் திகதி சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்ட போதிலும் அதனை 144 நாட்கள் பின் போடுவதற்கு அமெரிக்கா முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ள நீதிபதி முனீர் ஹத்தாத் குறித்த சந்தர்ப்பத்தில் கடாபி சதாமைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கர்களுக்கு லஞ்சம் கொடுக்க முனைந்ததாகவும் சர்வதேச நீதிமன்ற விதிகளின் படி மேலதிக கால அவகாசத்துக்கு இடமிருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

சதாம் ஹுசைனுக்கு தூக்குத் தண்டனை வழங்கிய சிரேஷ்ட நீதிபதியே ஹத்தாத் என்பது குறிப்பிடத்தக்கது.