வட கொரிய எல்லைக்கு ஆயுதங்களை அனுப்பும் ரஷ்யா

வட-கொரியா அமெரிக்கா இடையே போர் மூளும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், வடகொரியாவுடனான தமது எல்லைப் பகுதிக்கு ஆயுதங்களை அனுப்பியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்.

வடகொரியா விவகாரம் தொடர்பில் அமெரிக்காவினால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் முன் வைக்கப்பட்ட கண்டன தீர்மான வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்களுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன் அமெரிக்கா தன்னிச்சையான முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே தமது எல்லைப் பகுதிக்கு (11 மைல்) ரஷ்ய கனரக ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.