மீ’முல்ல: நாடாளுமன்ற விவாதத்திற்கு ரணில் இணக்கம்

மீதொட்டமுல்ல குப்பை மேடு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி தலைவர் தினேஷ் குணவர்தன முன் வைத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.