இறக்காமம்; பிக்குகளால் மீண்டும் சர்ச்சை; கட்டிடம் அமைக்க முஸ்தீபு

கடந்த இரு தினங்களாக இறக்காமம் மாயக்கல்லி சட்டவிரோத சிலை நிறுவல் தொடர்பான சர்ச்சையை மீண்டும் முன்னெடுக்கும் வகையில் ஜந்து பேர் கொண்ட பௌத்தமதகுருமார் குழுவொன்று தனியார் காணியொன்றிற்குள் அத்துமீறி பிரவேசித்ததுடன் சட்டத்தை மீறும் வகையில் காணியினை சுற்றி சுத்தம் செய்ததுடன் புத்தசமயம் தொடர்பான கட்டிடமொன்றை நிர்மாணிக்க முற்பட்டிருந்தனர்.
இது தொடர்பாக நேற்றைய தினம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.எனினும் நிறுத்தப்படமால் தொடர்ந்தும் பணிகள் இடம்பெற்ற நிலையில் இன்று அங்கு கூடிய பிரதேச மக்கள் அவ் குழுவினறுக்கு பாரிய எதிரப்பினை தெரிவித்ததோடு உடனடியாக நிர்மாணப்பனிகளை நிறுத்துமாறு கூறியும் தமது நியாய பூர்வமான கண்டனத்தை தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், அரசியல் பிரதிநிதிகளான ஆரிப் சம்சுடீன்,  உலமாக்கள் சட்டத்தரணிகள் இளைஞர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து இவ் அத்துமீறல் நடவடிக்கை தொடர்பான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். இன்று தமனை பொலிஸ் நிலையத்தில் சம்பந்தபட்டவர்கள் அழைக்கப்பட்டு விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டது.
-சப்னி அஹமட்