மே தினத்தில் பலத்தை நிரூபிப்போம்: மஹிந்த

எதிர்வரும் மேதினத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் பலத்தை நாடறியும் என தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.

அரசியலில் இருந்து தான் ஒதுங்கப் போவதில்லையென இந்திய ஊடகம் ஒன்றுக்கு இவ்வாரம் தெரிவித்துள்ள அவர், மேதின நிகழ்வின் மூலம் தமது கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் பலம் நிரூபிக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், இம்முறை மேதினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் மே தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள அதேவேளை அங்கு 20 ல ட்சம் பேரை அழைத்து வரவுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.