வெசக் பண்டிகைக்கு முன் நிர்வாக மாற்றங்கள்: ஜனாதிபதி

இவ்வருட முற்பகுதியில் அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் வெசக் பண்டிகைக்கு முன்பதாக அரச நிர்வாகத்தில் மாற்றங்கள் வரவுள்ளதாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி.

அமைச்சரவை மாற்றம் இதில் உள்ளடங்குமா எனும் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத ஜனாதிபதி, மாற்றங்களை இன்னும் இரு வாரங்களில் கண்டு கொள்ளலாம் என பதிலளித்துள்ளமையும் அரச திணைக்களங்களிலும் நிர்வாக மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.