அணு ஆயுத நிலையத்தில் ‘கரப்பந்து’; வட கொரியாவின் விளையாட்டு!

வடகொரியா மேலும் ஒரு அணு ஆயுத பரிசோதனையை மேற்கொள்ளப் போகிறது எனும் எதிர்பார்ப்பும் பதட்டமும் நிலவி வரும் நிலையில் கடந்த நான்கு நாட்களாக அணு ஆயுத நிலையத்துக்கருகே வடகொரியர்கள் கரப்பந்து விளையாடிக் கொண்டிருக்கும செய்மதிப் படங்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா – வடகொரியா இடையில் வார்த்தைப் போர் இடம்பெற்று வரும் நிலையில் மேலும் ஒரு அணு ஆயுத சோதனை எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், அங்கு அதற்கான எவ்வித சமிக்ஞைகளும் காட்டப்படாத நிலையில் கரப்பந்தாட்டம் விளையாடும் செய்மதிப் படம் வெளியாகி உலகின் அவதானத்தைப் பெற்றுள்ளது.

இது வேண்டுமென்றே திசை திருப்பும் செயலாக இருக்கும் என அமெரிக்கா தெரிவிக்கின்ற அதேவேளை, அரசியல் இலாபத்தைத் தரக்கூடிய நேரத்திற்காக அணு ஆயுத பரிசோதனையை வடகொரியா ஒத்தி வைத்திருக்கக் கூடும் எனவும் மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.