கரதியான சென்றடைந்த கொழும்பு ‘கழிவுகள்’

பலத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் மத்தியில் நேற்றைய தினம் கொழும்பிலிருந்து கழிவுத் தொகுதியொன்று கரதியான பகுதியில் புதிய இடமொன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கரதியானயில் குப்பைகள் கொட்டுவதற்கு நீதிமன்றம் அனுமதித்திருந்த போதிலும் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து மீண்டும் ஆர்ப்பாட்டக் காரர்களைக் கலைக்க நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டதனைத் தொடர்ந்து பொலிசாரின் உதவியோடு கழிவுகள் காண்டு செல்லப்பட்டுள்ளமையும், அங்கு தற்காலிகமாகவே குப்பைகள் கொட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.