திருட்டு: ஏழு வருடங்களின் பின் UAE சென்ற இலங்கைப் பெண் கைது

தனது அனுசரணையாளரிடம் 2 லட்சம் திர்ஹம்கள் பெறுமதியான பொருட்களைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெண்ணொருவர் ஏழு வருடங்களின் பின் அமீரகம் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

14,000 திர்ஹம் பணம் மற்றும் தங்க, வைர நகைகளைத் திருடியதாக 2010ம் ஆண்டு குறித்த நபர் மீது குற்றச்சாட்டு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.