மாடியில் இருந்து வீழ்ந்த இளைஞனின் ஜனாஸா நல்லடக்கம்

மலேசியா உள்ளிட்ட பல நாடுகளின் முன்னாள் தூதுவரும் தற்போதை ஐக்கிய நாடுகள் சர்வதேச நிறுவனத்தின் இணைப்புப் பிரிவின் இலங்கைக்கான ஆலோசகரும் பிரதாணியுமான இப்ராஹிம் அன்ஸாரின் கனிஷ்ட புதல்வர் முஹமட் முனீஸ் (25) இன் ஜனாஸா நேற்று இரவு (19) மாதம்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்டக்கம் செய்யப்பட்டது.

இவர் கடமையின் போது டயலொக் நிறுவனத்தின் தலைமையகத்தின் 15வது மாடியிலிருந்து நேற்றுப் பிற்பகல் 2.00 மணியளவில் வீழ்ந்து காலமானார். லண்டன், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் கல்வி கற்ற இவர் இறுதியாக மலேசியப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கல்வி பயின்று இறுதிப் பரீட்சையில் தோற்றி பட்டமளிப்பு விழாவிற்காக காத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் குறித்த தனியார் நிறுவனத்தில் பயிற்சிப் பொறியிலாளராக இணைந்து ஒருமாதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாஸா நிகழ்வவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உலமாக்கள், அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் எனப் பெருந்திரலானவர்கள் கலந்திருந்தனர். அத்துடன் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரும் தமது அனுதாபங்களை தெலைபேசியூடாக அன்ஸார் குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளனர். மரணம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்