வசீம் கொலை: ஷிரந்தி ராஜபக்சவுக்கு ‘வலை’?

வசீம் தாஜுதீன் விவகாராத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி கைது செய்யப் படக்கூடும் என தகவல் வெளியிட்டுள்ளது அலோசியஸ் மகேந்திரனால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள செய்திப் பத்திரிகை.

குறித்த விவகாரத்தில் ஷிரந்தி மீது சந்தேகம் நிலவுவதாக ஊகங்கள் நிலவும் அதேவேளை அவருக்குச் சொந்தமான வாகனம் உபயோகிக்கப்பட்டதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார். இந்நிலையில் விரைவில் மிக முக்கிய நபர் ஒருவர் கைதாகவுள்ளதாக தெரிவித்துள்ள குறித்த செய்தி, ஷிரந்தி ராஜபக்சவின் தொலைபேசி இலக்கத்திலிருந்தே குறித்த இரவு 41 அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அநுர சேனாநாயக்கவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் மகேந்திரனின் குடும்பம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது.