கண்டியில் சிறு அசம்பாவிதம்; இரு முஸ்லிம் இளைஞர்கள் கைது!

புத்தளம் பகுதியிலிருந்து கண்டிக்கு சுற்றுலா சென்றிருந்த முஸ்லிம் இளைஞர்களின் தவறான நடவடிக்கையால் கண்டியில் சிறு அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர்கள் பயணித்த வேனின் டயர் பன்சல் ஒன்றின் அருகில் காற்றிழந்திருந்த நிலையில், இருவரைத் தவிர ஏனையோர் ஜும்மாவுக்கு செல்ல, அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள் அருகில் இருந்த பன்சலயிலிருந்த உடைந்த புத்தர் சிலைப் பகுதியொன்றை வேன் டயருக்கு முட்டாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் இதனைக் கண்ணுற்ற சிங்கள இளைஞர்கள் குறித்த முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் தாக்கி வேனை எரியூட்ட முனைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பொலிசாரின் தலையீட்டில் இரு முஸ்லிம் இளைஞர்களையும் கைது செய்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளதோடு கைதானவர்களை நாளை நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.