அக்குரணைக்கு சட்டவிரோத மாட்டிறைச்சி; மூவர் கைது

மதவாச்சி பகுதியிலிருந்து அக்குரணைக்கு சட்டவிரோதமாக மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற மூவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்ற மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு மிஹிந்தலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.